Saturday, August 15, 2009

தந்தியறுந்த வீணை








வானத்து வெண்ணிலவொன்று
வையகம் வந்து பெண்ணவளானதோ
வட்டமுகத்தில் சிறு பொட்டொன்று வைத்து
என் வாசலில் வந்ததோ
என் வாழ்க்கை என்றதோ

அவள் கட்டழகு என் கண்களை
கொள்ளை அடித்துச் சென்றதோ
என் எண்ணங்களின் மொத்த
வண்ணமாய் என் முன் நின்றாள்
என் அழகு தேவதை

என் எண்ணத்தில் உதித்த
வண்ணத்துப் பூச்சி அவள்
எனக்கும் அவளுடன் சிறகு விரிக்க ஆசை
இருந்தும்சிறகொடிந்த பறவை நான்

அன்னை தந்தையின் அன்புக்கும்
அண்ணா அக்காவின் பாசத்திற்கும்
அடிமையாகி உரைத்து விட்டேன்
சத்தியமா யாரையும் காதலிக்க மாட்டேன் என

காதலையும் சொல்ல முடியாது
காதலி நினைவையும் மறக்க முடியாது
கணப் பொழுதும் செத்துப் பிழைக்கிறேன்
மழைத்துளி மண்ணில் விழுந்து உடைவது போல
தினம்தினம் உடைந்து சுக்கு நூறாய் போகிறேன்

காதலுக்கும் பாசத்துக்கும் இடையில்
இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறேன்
காதலுக்காக பாசத்தை விடவா இல்லை
பாசத்திற்காக காதலை விடவா
கடவுளுக்கு தான் கருணை மனு எழுதுகிறேன்

என் இதயத்தை தொலைத்து விட்டு
இருட்டினில் தேடுகிறேன்
இஸ்டமில்லாமல் வாழவும் முடியவில்லை
இறந்து போகவும் மனமில்லை

இறைவா எனக்கொரு வழி சொல்லு_இங்கு
தந்தியறுந்த வீணை ஒன்று
தனியாய்க் கிடக்கிறது
மீட்டுவார் யாருமின்றி.

2 comments:

  1. பாசத்தை நெஞ்சிலும் காதலி வாழ்க்கையிலும் வைத்திருங்கள் இரண்டும் தேவை. இரண்டும் இரு கண்கள்.

    ReplyDelete
  2. நன்றி உங்கள் அன்பான கருத்துக்கு. ஆனாலும் சொன்ன வாக்கு மீறக் கூடாது என்று நினைப்பவன் நான். அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை

    ReplyDelete