Tuesday, August 11, 2009

மானாட மயிலாட


மரணப்படுக்கையில் மறவர்களும்
மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும்
மானாட மயிலாட பார்த்து
மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான்

மானாட மயிலாடவில்
இடைவேளை வரும் போது
ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன்
ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து
எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன்

புலிகள் தேவைப்பட்டார்கள்
எம் பொதி சுமப்பதற்காய்
இன்று நான் ஜனநாயகவாதி
என் தவறை உண்ராது
தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன்

எந்த விமானம் எத்தனை பாகையில்
குண்டு போட்டது..
எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது
எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன்
என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து

ஏனென்றால் என்பெருமையை சொல்ல
இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம்
நான் நாறுவதே தெரியாமல்
நாறிப்போகும் பட்டங்கள் என
நாட்டாமை செய்கின்றேன்

எவ்வாறு என் இனத்தை மீட்கலாம்
என்பதற்காய் என் பேனா எழுதாது
எப்படியேனும் வயிறு வளர்க்கவேணும்
என்பதற்காய் என்ன வேணுமானாலும் செய்யும்
என் பேனா...!

2 comments:

  1. எவ்வாறு என் இனத்தை மீட்கலாம்
    என்பதற்காய் என் பேனா எழுதாது
    எப்படியேனும் வயிறு வளர்க்கவேணும்
    என்பதற்காய் என்ன வேணுமானாலும் செய்யும்
    என் பேனா...!


    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. நன்றி உங்கள் கருத்துக்கு. இன்று எம் முன்னுள்ள தேவை எம் மக்களை கரைசேர்ப்பதே..
    அதை எமக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் செய்ய முயற்சிக்கணும் அதுவே எமது தலையாய கடமை.

    ReplyDelete