Friday, August 7, 2009

சோகம்


சோகம் என் வாழ்வினிலே என்றும் சோகம்
வட்ட நிலவே உன்னை விட்டதும் சோகம்
வண்ண மலரே உன்னை தொட்டதும் சோகம்
விட்டுவிடென்றாய் பட்டது காதல் சோகம்

அன்னையைப் பிரிந்ததும் சோகம்
அன்னை மண்ணைப் பிரிந்ததும் சோகம்
அன்னை போல் வந்து அன்பினைப் பொழிந்தாள்
ஆயிரம் வார்த்தைகள் கூட பேசியிராள்
அறுபது பாடலாவது போட்டிருப்பாள்
அதுதான் அவள் வேத வாக்கு எனக்கு

ஆயிரம் கனவுகள் வளர்த்தேன்
அத்தனையும் ஒற்றைச் சொல்லில் கலைத்தாள்
அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றாள்
அன்பு வைச்ச நெஞ்சில் ஆயிரம் சோகங்கள்
அறிவாளோ என் ஆசை நாயகி...

அலைஞ்சு திரிய அவளெங்கோ நானெங்கோ
அன்றில் பறவையாய் அலைகிறது இதயம்
அன்றொரு மாலைப் பொழுதில்
அழகு காட்டினாள் கறுப்பு வண்ண சேலை கட்டி
அலை பாய்ந்தது என் மனது
அடைந்து விடத் துடித்தது அவளை அறியாமலே

ஆனாலும் மிஞ்சியது சோகம்
அன்பைப் பொழிந்தாள் அரவணைத்தாள்
அரை நொடியில் அறுத்து விட்டாள்
அன்பு கொண்ட நெஞ்சம் அழுவதே தெரியாமலே
அலைகடலில் தவழ்ந்த மீன் இன்று
கண்ணீர் கடலில் தவிக்கிறது
காதல் சோகத்தால்....

4 comments:

  1. பிரிவு கொடியது சோகம் அதை விட கொடியது ...........சோகத்தில் காதல் தந்த இன்பத்தை நினையுங்கள் சோகமும் சுகமாகும்.

    ReplyDelete
  2. சோகம் கொண்டு , சோகத்தை வைத்து சோக வரிகளில் வார்த்த கவி வரிகள் சோக்காய் தான் இருக்குது.

    வாழ்த்துக்கள். அருமையாக இருந்தது.....

    ReplyDelete
  3. நன்றி நிலாமதி அக்கா உங்கள் கருத்துக்கு.
    சோகத்தை பரிசாய் தந்தவள் கூட அந்த சுகத்தையும் கேட்டுவிட்டாள்...

    ReplyDelete
  4. நன்றி சப்ராஸ் அபூ பக்கர் அண்ணா.
    கவிதையால் பாராட்டி உள்ளீர்கள்.

    ReplyDelete