Wednesday, July 29, 2009

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே


எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து
எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி...

எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய்
என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்...

என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

மரணத்திற்கு நாள்க் குறித்து
மரணத்தையே முத்தமிட்ட...

மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன்
என்று பெருமை கொள்ளும் என் மனது..

மாண்ட உங்களின் கனவான_தாய்
மண் விடுதலைக்காய் உழைக்காது...

வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால்
என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர்
ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ...

அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர்
தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை...

அர்ப்பணித்தும் இன்று உங்கள் கனவு வெறும் கனவாகவே
போய்விடுமோ என்று தெரிந்தும் நீர்விட்ட...

பணி தொடராது அழுதுபுலம்பும் கோழை நான்_அதனால்
என்னை மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே!

என்னை நினைத்தே நான் தோற்றுப்போகிறேன்
இன்னும் எத்தனை நாளைக்குத் தான்...

இணையங்களில் எழுதி என்(ம்)னை(மை) நானே ஏமாற்றுவது
என்ன செய்யபோகிறேன் உங்கள் கனவை நனவாக்க...

எனக்கு எதுவுமே தெரியாவில்லை_அதனால்
என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

தாயகக் கனவைச் சுமந்த நீங்கள்_இந்த
பாவியின் பாவமன்னிப்பையும் சுமந்திடுங்கள்...

யேசுவையே சுமக்கும் சிலுவைகள் நீங்கள்_பாரு
இப்பவும் பாவமன்னிப்பு கேட்டு தப்ப நினைக்கும் பாவியாய் நான்..

பரிகாசமாய் இருக்கிறது என்னை நினைத்தாலும் எனக்கு_ஆனாலும்
என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே!

1 comment:

  1. ஈழத்து மாவீரர்களின் தியாகத்துக்கு முன் நாமெலாம் குற்ற உணர்வு உள்ளவர்களாக உள்ளோம். உங்க்ளைபோலவே . காலம் தான் நம் வலியை ஆற்றும்.

    ReplyDelete