Friday, July 24, 2009

காதல்


அன்பே ஆருயிரே_என்
ஆன்மாவின் ஆத்ம ஜீவனே..
கண்ணே மணியே_என் கண்ணுக்கு
கண்ணாயிருக்கும் கார்குழலே..

முத்தே என் முத்தழகே
மூன்றாம்பிறை பெண்ணழகே..
விண்ணே மண்ணே
விண்ணில் தோன்றும் நிலவே
இப்படி எத்தனை பூச்சுத்தல்கள்...

கழுதையின் குரலைக் கூட
குயிலின் குரல் போல் என்பர்..
கண்டது நிண்டதெற்கெல்லாம்
காதலி புராணம் பாடுவர்..

காமத்துப் பாலில் வருவதை விட
காதலி உடலை வர்ணிப்பர்..
கவிஞர்கள் கூட தோற்றுவிடுவர்
காதலர்களின் கவி வர்ணனையில்..

காதல் ஹோர்மோன்களின் கலகமே
காதல் கடவுளுமல்ல புனிதமுமல்ல..
நீயின்றி நானில்லை_உன்
நிழலைக்கூட நேசிப்பேன்..

நீயில்லாத உலகில் நின்மதியில்லை
நீ தான் என் வாழ்வும் சாவும்..
எல்லாம் ஏமா(ற்)றும் வரைக்கும் தான்
முதலிரவின் முன் அரங்கேற்றமே காதல்.!


2 comments:

  1. காதல் ஹோர்மோன்களின் கலகமே
    காதல் கடவுளுமல்ல புனிதமுமல்ல.

    இந்த வரிக்கு நான் உடன்பாடு இல்லய். காதல் இருக்கு அதை துஷ்பிரயோகம் செய்வோர் . தமக்கு ஏற்ப இசைவாக பார்போர் தான் இந்த காலத்தில் .ஒரு காலத்தில் உண்மைக்காதல் இருந்தது இப்போதும் இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்று ,உடலாலும் மனதாலும் வாழ்வது தான் காதல் .தெய்வீக காதல் . தற்கால காதல் அ டிப்படையில் பணத்தால் தோற்று விடுகிறது. காதல் மாறுவதில்லை. காதலர்கள் தான் மாறுகிறார்கள். மாற்றப்படுகிறார்கள்.

    ReplyDelete
  2. நன்றி அக்கா. நீங்க சொன்னது உண்மையே
    இருக்கு ஆனால் இல்லை

    ReplyDelete