Wednesday, September 2, 2009

உடைந்த இதயத்தின் இறுதி ஆசை..

















என்னவளே
விழியோடு பேசி விளையாடிச்சென்று
உயிரோடு உறைந்த உறவே
விதி போல என்னோடு விலகாது
நின்று உறவாட வந்த உயிரே
கனவோடு மட்டும் கலைந்து போகும்
கற்பனை உறவா நம் காதல்

கண்டதும் வாங்கி காலினில் மாட்டி
கழட்டிவிட்டுப் போகும் செருப்பா காதல்
கண்காணா விட்டாலும்
கணப்பொழுதும் உன் நினைவில்
காத்திருக்கும் காதலே என் காதல்

பிள்ளைத் தமிழோடு செல்லக் குரலெடுத்து
தெள்ளத் தெளிவாக தேன்மாரி பொழிந்த
என் பால்நிலாவே_உன்
செவ்வாய் உதிர்த்து சொல்வாய் திருமொழி
என் காதலன் நீ தான் என்று

நீ இல்லாது போனால்
இருட்டாகும் என் வாழ்க்கை
இது சத்தியம் என் ஆருயிரே
சொல்லாத சொல்லுக்குச்
சுதந்திரம் உண்டு_நான்
சொல்லிய சொல்லுக்கு
நிரந்தரம் உண்டு

என் நாளும் காப்பேன் என் வாக்கை
என் தந்தை மீதிது சத்தியம் அன்பே
ஏனோ என் பேனா கூட மை சிந்துகிறது
நான் ரத்தக் கண்ணீர் சிந்துவதை
தாங்காமல் தானோ_இல்லை
என் சோகம் சொல்லும்
வரிகளை எழுதும் கடைசி
எழுத்து இதுவென்று நினைத்தோ...

1 comment:

  1. ஈழத்து நிலவே உனக்கு என் இந்த சோகம்.........சோகம் சுகமாகும் கண்கள் கூட ரத்தம் வடிக்கிறதே. கலங்காதே ....வரவர உங்க கவிதை மிகத்தரமாய் இருக்கிறது வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி அக்கா .

    ReplyDelete